சிங்கப்பூர் : வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும் புதிய திட்டம்!!
சிங்கப்பூரில் குழந்தை பராமரிப்புக்கான முன்னோடி திட்டமான அந்த சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும்.முதற்கட்டமாக மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் வேலை செய்து கொண்டே குழந்தைகளைப் பராமரிப்பதற்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அரை நாளுக்கு சுமார் $16 வெள்ளி கட்டணமாக செலுத்த வேண்டும்.
மூன்று ஆண்டுகள் முன்னோடி திட்டம் அமலில் இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் .
அந்த நிதியைக் கொண்டு சலுகை கட்டணத்தில் சேவைகளை வழங்க முடியும்.
பராமரிப்பு சேவை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும்.
ஒவ்வொரு பராமரிப்பாளரும் ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் வரை வீட்டில் அல்லது சமூக மையத்தில் பார்த்துக்கொள்ள முடியும்.
Follow us on : click here