சிங்கப்பூரில் மே தின செய்தியில் தேசிய முதலாளிகள் குறித்து சம்மேளனம் வலியுறுத்தியது.
நிச்சயமற்ற பொருளியல் சூழலாக இருக்கும்பொழுது ஒவ்வொரு சிங்கப்பூர் ஊழியருக்கும் வேலைகள், சம்பளம்,வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு சம்மேளனத்தில் குறிப்பிட்டிருந்தது.
அவர்கள் வேலையில் முன்னுக்கு வருவதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கும்படி முதலாளிகளை அது கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரர்கள் உலக அளவிலும்,வட்டார அளவிலும் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்பதற்கு வெளிநாட்டு வேலை அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியது.
ஊழியர்கள் தகுந்த பயிற்சியைப் பெற்றால் மட்டுமே வேலைகளுக்குத் தகுதி பெறுவர்.புது திறன்கள் உயர்ந்த வேலைகளில் பணிப்புரிவதற்கு தேவை.
சிங்கப்பூர் முதலாளிகள் வேலைகளை மாற்றி அமைக்கும்படியும், வர்த்தகங்களை உருமாற்றும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.