சிங்கப்பூர் தேசிய தினம்!!என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது?

சிங்கப்பூர் தேசிய தினம்!!என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது?

இவ்வாண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய தின அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பாடாங்,மரினா பே ஆகிய இரண்டு இடங்களில் உள்ள புரோமொண்டரி உள்ள இரண்டு இடங்களுக்கும் தேசிய தின கொண்டாட்டங்களுக்காக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

5 குடியிருப்பு பகுதிகளில் தேசிய தினத்திற்கு மறுநாள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு தேசிய தினம் முழுமை தற்காப்பு படையின் 40-வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை கொண்டாடும் வகையில்பாடாங்மற்றும் மரினா பே ஆகிய இடங்களில் காட்சியங்கம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தேசிய அமைப்புகளும், சமூக அமைப்புகளும் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதை இந்த தற்காப்பு காட்சியின் மூலம் காட்ட விரும்புகிறோம் என மேஜர் சுப்பிரமணியம் சிங்காரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாடாங் மற்றும் புரோமொண்டரியில் அணி வகுப்பு நடைபெறும்.

மேலும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதி வழியாக அணி வகுத்து வீரர்கள் செல்வார்கள். இது முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்து கடலோர கொண்டாட்டங்கள் நடைபெறும். மக்கள் கழகத்துடன் இணைந்து குடியிருப்பு பகுதியில் கொண்டாட்டங்கள் நடத்தப்படும்.

இந்த இடங்களில் மக்கள் கலை நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கைகள் போன்றவைகளை காணலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு தேசிய தினத்தின் கருப்பொருள்”என்றென்றும் ஒன்றாவோம்”

சிங்கப்பூர் தனது 59 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளது.