சிங்கப்பூர் : பெண்ணைக் கத்தியால் குத்தி கொலைச் செய்த நபர்!!
ஹவ்காங் ஸ்ட்ரீட் 21 இல் உள்ள பிளாக் 210 இல் ஒரு கடையில் 34 வயதுடைய பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன் தொடர்பாக 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் டிசம்பர் 10 ஆம் தேதி (இன்று) முற்பகல் 11 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கத்தியால் குத்தப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் மீது டிசம்பர் 12 ஆம் தேதி கொலை குற்றம் சுமத்தப்படும்.
கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.
Follow us on : click here