சிங்கப்பூர் : ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள கறி பஃப் கடையில் மேடர்!!

சிங்கப்பூர் : ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள கறி பஃப் கடையில் மேடர்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த Kitefoiling சாகச வீரர் மேக்ஸ் மேடர் இந்த ஆண்டின் உலகின் இளைய கடலோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18 வயதான மேடர் இந்த விருதை வென்றால் ஒரு நாள் முழுவதும் கறி பஃப் கடையில் வேலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் நேற்று ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள சுன் சுன் ஹுவாட் கறி பஃப் கடையில் கறி பஃப்ஸை விற்பதற்காக சிவப்பு நிற உடையில் உற்சாகமாக காணப்பட்டார்.

அவரைச் சந்திக்கும் ஆர்வத்தில் வாடிக்கையாளர்கள் காலை 7.30 மணிக்கே கடை வாசலில் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இவ்வளவு பிரபலமாக இருந்தும் அவரது தன்னடக்கத்தை மக்கள் பாராட்டினர்.

காலையில் வேலை தொடங்கியதிலிருந்து சுமார் 150 வாடிக்கையாளர்களுக்கு கறி பஃப்ஸை விற்றதாகத் தெரிவித்தார்.

அந்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்று கூறினார்.

 

 

மேடர் நன்றாக வேலை செய்ததாக கடை உரிமையாளர் கூறினார்.

மேலும் அவரது பெயர் பொறிக்கப்பட்ட கறி பஃப் ஒன்றையும் பரிசாக அளித்தார்.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg