சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

இவ்வாண்டின் முதல் காலண்டில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 4,900 ஆக அதிகரித்துள்ளது.

இது முந்தைய காலண்டை விட கிட்டத்தட்ட 2,600 குறைவு.

அதற்கு வேலை வாய்ப்புகளில் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே சமீபத்திய உயர்வுக்கு காரணம் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

நிதிச் சேவைகள்,சுகாதாரத்துறை,சமூகச் சேவை,பொது நிர்வாகம்,கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிங்கப்பூரர்கள் பணி புரிவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலிருந்து முதல்முறையாக வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

கட்டுமானத்துறையில் பணி புரியும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.Work Permit வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

தொடர்ந்து இரண்டாவது காலாண்டில் பணி நீக்கங்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது கடந்த இறுதி காலாண்டில் 3460 ஆக இருந்த நிலையில் கடந்த காலாண்டில் அதன் எண்ணிக்கை 3000 ஆக இருந்தது.

அதற்கு முக்கிய காரணம் நிறுவனங்களின் மறுசீரமைப்பே என்று கூறப்படுகிறது.