Latest Tamil News Online

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த பெருமையைச் சேர்த்த சிங்கப்பூர்!

2024-ஆம் ஆண்டுக்கான Qs Quacquarelli Symonds உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தரவரிசை பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பிடித்து அந்த சாதனையை புரிந்திருக்கும் ஆசியாவின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் சேர்த்துள்ளது.

முதல் 10 இடங்களில் இடம் பிடித்தது இதுவே முதல்முறை.

இந்த முறை பல்கலைக்கழகத்தின் தரநிலையைத் தேர்ந்தெடுப்பதற்காக 3 புதிய அம்சங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.நீடித்த நிலத்தன்மை, அனைத்துலக ஆய்வுக் கட்டமைப்புகள் , பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட புதிய அம்சங்கள் ஆகும்.

உலக அளவில் வேலை இடங்கள் விரும்பும் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் 7 வது இடத்தை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் பிடித்தது.

Massachusetts Institutes of Technology-MIT உலகின் ஆகச்சிறந்த பல்கலைக்கழகம் என்ற வரிசையை 12-ஆவது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டது.

பட்டியலில் 2-வது இடத்தை Cambridge பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது.

பட்டியலில் ஒரு படி முன்னேறி 3-ஆவது இடத்தை Oxford பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.