சுற்றுலா பயணிகள் விரும்ப கூடிய நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள சிங்கப்பூர்!!

உலகின் சிறந்த நகரங்களின் தரவரிசை பட்டியலை அனைத்துலக சந்தை ஆய்வு நிறுவனமான Euromonitor International மற்றும் தரவு நிறுவனமான Lighthouse ஆகியவை ஒன்றிணைந்து தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இந்த ஆண்டு உலகின் சிறந்த நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 15-ஆவது இடத்தில் இருந்தது. இவ்வாண்டு அந்த பட்டியலில் சிங்கப்பூர் 11-ஆவது இடத்தைப் பிடித்து முன்னேறியுள்ளது.

அது சிறந்த 100 நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகும்.

பாரிஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடத்தை துபாய் மற்றும் மட்ரிட் பிடித்துள்ளது.

எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது?

நகரங்களின் சுற்றுலா, நிலைத்தன்மை, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தரவரிசைப்படுத்தப்படுகிறது.