சிங்கப்பூர் அனைத்துலக நகை கண்காட்சி...!!
சிங்கப்பூர்: 19-வது ஆண்டாக சிங்கப்பூரில் அனைத்துலக நகைக் கண்காட்சி
நடைபெற்றது.
இதுவரை கண்டிராத மிகப்பெரிய கண்காட்சி, மனதைக் கவரும் பல நகைகளைக் கொண்டதாக இருந்தது.
இந்த கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த 335 நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த கண்காட்சியானது சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பிராந்தியத்திற்கு ஐரோப்பிய நகை ஏற்றுமதிகளை கொண்டு வருவதன் மூலம் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
மனதை கொள்ளை கொள்ளும் இந்த நகை கண்காட்சிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டனர்.
இந்த கண்காட்சி மரினா பே சாண்ட்சில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வரை நடைபெறுகிறது.
உலகளவில் வளரும் இளம் நகை வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
‘சுற்றுச்சூழலுக்கு உகந்த நகைகள்’ என்ற தலைப்பில் போட்டி நடந்தது.
இந்த கண்காட்சியில் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை மாறியிருக்கும் நகைகள் இடம்பெற்றிருக்கும்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் பயிற்சி வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
மேலும் அவர்களுக்கு இத்தாலியில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
உலகின் புகழ்பெற்ற நகைகள், ரத்தினக் கற்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான தகவல் பகிர்வு வசதிகள் மற்றும் சமூக செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
Follow us on : click here