சிங்கப்பூர் சர்வதேச எரிசக்தி வாரத்தின் நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் துறை அமைச்சர் கான் கிம் யோங் அக்டோபர் 23-ஆம் தேதி (இன்று ) தொடங்கியது. அதில் அணுசக்தி குறித்து பேசினார். அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்க வில்லை என்றார்.எனினும் சிங்கப்பூர் அதனை கண்காணித்து வருவதாக கூறினார்.
அணுசக்தி போன்ற குறைந்த கார்பன் ஆற்றல் மூலங்களை பயன்படுத்திப் பல நாடுகள் தங்களின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
அதே போன்று சிங்கப்பூரும் , அணுசக்தி தொழில்நுட்பத்திற்கு தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முதல் நிலை முயற்சியை குறித்த முடிவுகளை கவனித்து வருவதாக கூறியுள்ளார் அமைச்சர் கான் கிம் யோங்.
தற்போது அணுசக்தி ஆற்றலை பயன்படுத்தும் முடிவுக்கு தாங்கள் வரவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே நைட்ரஜன் மற்றும் அணுசக்தி போன்ற குறைந்த கார்பன் ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவது குறித்த மாபெரும் முயற்சியில் சிங்கப்பூர் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து அணுசக்தி தொழில்நுட்பத்திற்கு தேவையான தொழில்நுட்ப ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்து முடிவுகளை எடுத்து வருவதாகவும் இது ஆற்றல் சேமிப்பு முறைக்கு உதவியாக அமையும் எனவும் கூறியுள்ளார்.
சிறிய அணு உலை மாதிரிகளை வடிவமைத்து தங்களின் முதல் சோதனையில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மாதிரி அணுசக்தி தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் அதனை பராமரிப்பதிலும் ஏற்படும் சிக்கல்களை தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.