சிங்கப்பூர் : புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தகவல்கள்!!

சிங்கப்பூர் : புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தகவல்கள்!!

சிங்கப்பூர் : மக்கள் கழகத்தின் அடித்தள அமைப்புகள் இந்த மாதம் (டிசம்பர் 2024) 31 ஆம் தேதி புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகளை 17 குடியிருப்பு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

சுமார் 1,700 அடித்தள தலைவர்கள் மற்றும் தொண்டூழியர்கள் அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் நடைபெறவுள்ள புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகள் ONE Countdown 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

அனைத்து வயதுள்ளவர்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சிகள் குறித்த மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள பொதுமக்கள் சமூக மன்றங்கள்,வசிப்போர் குழுக்கள் மற்றும் அக்கம்பக்கம் குழுக்கள் ஆகியவற்றை நாடலாம்.