சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!!
சிங்கப்பூர் : ஹவ்காங் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவம் ஹவ்காங் ஸ்ட்ரீட் 91 உள்ள பிளாக் 971 இல் தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து மத்தியம் 12.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ மூண்டது.
வீட்டுக்குள் அதிகாரிகள் சென்ற போது இருவர் படுக்கையறையில் கிடந்தனர்.அவர்களைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.
தீ மதியம் 3.15 மணியளவில் அணைக்கப்பட்டது.அதன் பின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
படுக்கையறையில் மேலும் ஒருவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.
வீட்டில் இருந்த ஒரு பூனை,ஒரு பறவை மற்றும் 8 முயல்கள் மீட்கப்பட்டன.
தீ மூண்டது எப்படி? என்ன நடந்தது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow us on : click here