சிங்கப்பூரின் மதிப்பு மிக்க ராணுவ விருது ஜெர்மன் கடற்படை தளபதிக்கு வழங்கி கௌரவிப்பு..!!!

சிங்கப்பூரின் மதிப்பு மிக்க ராணுவ விருது ஜெர்மன் கடற்படை தளபதிக்கு வழங்கி கௌரவிப்பு..!!!

சிங்கப்பூர்: ஜெர்மனியின் கடற்படைத் தளபதி(VADM) ஜேன் கிறிஸ்டியன் காக்கிற்கு சிங்கப்பூரின் மதிப்புமிக்க ராணுவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது..

விருது வழங்கும் விழா பாதுகாப்பு அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் இந்த விருதினை வழங்கினார்.

இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூர்க் கடற்படையின் வகை 218SG நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கு அவர் அளித்த ஆதரவானது நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி மற்றும் செயல்பாடுகளில் அதிக ஒத்துழைப்புக்கு வழி வகுத்தது.

ஜேன் கிறிஸ்டியன் காக் அக்டோபர் 1 முதல்
4 ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜேன் கிறிஸ்டியன் காக்கை கௌரவித்து பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் மெரிட்டோரியஸ் சர்வீஸ் மெடலை வழங்கினார்.