நேற்று ஜனவரி, 22- ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டின் முதல் நாள் தொடங்கியது. முதல் நாளான நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் Sengkang பொது மருத்துவமனைக்கு வருகைப் புரிந்தார்.
விடுமுறை நாளிலும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். விடுமுறை நாளாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படும் அத்தியாவசியத் துறைகளுக்கு ஊழியர்கள் கை கொடுப்பதாகவும் கூறினார்.
சுகாதார அமைச்சர் கடந்த ஆண்டைப் பற்றி நினைவு கூர்ந்தார். கடந்த ஆண்டு சுகாதாரத்துறைக்கு சிரமமான ஆண்டாக அமைந்தது. நோய் பரவிலிருந்து மீண்டு வந்த போதிலும் சிரமமாக ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு மூன்று கிருமி பரவல்கள் வந்தது. கடந்த ஆண்டு BA. 2 Omicron,BA. 4,BA. 5 போன்ற துணைக் கிருமிகளும்,XBB கிருமி வகையைச் சேர்ந்த கிருமியும் மூன்று முறைத் தாக்கத்தை ஏற்படுத்தியதையும் அமைச்சர் கூறினார்.
இவற்றை சமாளிப்பது பெரும் போராட்டமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற பராமரிப்பு ஊழியர்களுக்கும் சிரமமான ஆண்டாக இருந்தது. கடந்த ஆண்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது அறிந்த விஷயம் ஆனால், அதற்காக சுகாதார துறை ஊழியர்கள் பெரிதும் போராடினார்கள். இவ்வாறு, சுகாதார அமைச்சர் ஓங் கூறினார்.