சிங்கப்பூரில் புதிய உயிரணுச் சிகிச்சை முறை உருவாக்கப்பட்டுள்ளது.அது அரிய வகை ரத்த வகை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது தெரிய வந்துள்ளது.
அந்த சிகிச்சை முறையை T-Cell acute lymphoblastic (T-ALL) எனும் ஒரு வகை கடும் ரத்தப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது.அதில் 94 சதவிகித்தினருக்கு அறிகுறிகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்களால் புதிய சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது .
அரியவகை T-ALL ரத்தப் புற்றுநோய் வருடந்தோறும் சிங்கப்பூரில் சுமார் 5 பேரிடம் கண்டறியப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வழக்கமான சிகிச்சை பலன் அளித்துவிடும்.
சிகிச்சை பலன் அளிக்காதவர்கள் உயிர் பிழைக்கும் சாத்தியம் 10 சதவீதம் மட்டுமே.இந்த புதிய CAR T உயிரணுச் சிகிச்சை முறை மூலம் அதன் சாத்தியம் 50 சதவீதத்திற்கு உயரும் என்று கூறப்படுகிறது.
Follow us on : click here ⬇️
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg