மோசடிச் சம்பவங்களை குறைக்க தண்டனையை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!!

மோசடிச் சம்பவங்களை குறைக்க தண்டனையை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசாங்கம் மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளது.

அந்த வகையில் ஒருவர் Singpass அல்லது வங்கி கணக்கு போன்ற விவரங்களை மற்றவருக்கு தெரியப்படுத்தினால் அவருக்கு குறைந்தபட்சம் 6 மாதச் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

அதிகரித்து வரும் மோசடி சம்பவங்களை குறைக்க தண்டனை ஆலோசனை குழுவானது இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

மேலும் இம்மாதிரியான நடவடிக்கையினால் மோசடி சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசடி சம்பவங்கள் 7 மடங்காக அதிகரித்துள்ளது.

2023 இல் மோசடி சம்பவங்கள் 46,500 ஆக பதிவாகியுள்ளது.

அது 2022 உடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகமாகும்.

கடந்தாண்டு மட்டும் மோசடிச் சம்பவத்தால் சுமார் 650 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளது.

ஒருவர் தனது வங்கி கணக்கு குறித்த விவரங்களை மற்றவருக்கு பகிர்ந்து கொண்டால் அவருக்கு ஆறு மாதச் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஆனால் தற்போது அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம், 3 ஆண்டுச் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அதேபோல் Singpass ஐடியை பகிருவோருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதச் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இருந்தது.

தற்போது அக்குற்றத்திற்கு 10,000 வெள்ளி அபராதம் அல்லது 3 ஆண்டுச் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதுபோன்று தண்டனையை தீவிர படுத்தினால் மோசடிச் சம்பவங்கள் குறைய வாய்ப்புண்டு என்பதால் தண்டனை ஆலோசனை குழு இந்த பரிந்துரையை முன்வைத்ததாக கூறியது.