சிங்கப்பூரில் அதிகமான சிங்கப்பூர் மூத்தோர்கள் வீட்டிலையே இருப்பதற்கு விரும்புவதாக கூறிகின்றனர்.
மூத்தோர்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலும் அவர்கள் செவிலியர் இல்லங்களுக்கு, மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை.
அவர்கள் அவர்களுடைய வீட்டிலையே இருப்பதற்கு பலரும் விரும்புகின்றனர்.இதற்கு போதுமான ஆதரவு கிடைத்தால் இது சாத்தியம் ஆகலாம் என்றுத் தொண்டூழிய அமைப்புகள் கூறுகின்றனர்.
வீடமைப்புப் பேட்டைகளில் முதியோர்கள் தங்குவதற்கான வகையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.
தரை வழுக்கி விடாத வகையில் கட்டப்படுகிறது.அவர்கள் பிடித்து நடப்பதற்கு கைப்பிடி கம்பிகளும் பொருத்தப்படுகின்றன. அவர்களைக் கவனிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகின்றன.
தனித்து வாழும் முதியோர்களுக்காக உதவும் நோக்கி சில தொண்டூழிய அமைப்புகள் முன் வருகின்றது.
இதுபோன்ற உதவி அமைப்புகளில் சில முதியோர்களும் சேர்ந்துக் கொள்கின்றனர்.அவர்களும் இணைந்து மூத்தோர்களுக்கு உதவுகின்றனர்.
மூத்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், அவர்களுடன் நட்பாகப் பழகவும் தொண்டூழியர்களைப் பணி அமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.அவர்களுக்கு ஆலோசனை தரவும், அவர்களின் தனிமையைப் போக்கவும் தொண்டூழியர்கள் உதவிச் செய்கின்றனர்.