இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!

இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் இணைய பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது.சிக்கலான உள்கட்டமைப்பை பாதுகாக்கும் விரிவான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரயில்வே மற்றும் மின்சாரம் போன்ற சிங்கப்பூரின் முக்கிய உள்கட்டமைப்பின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனால் சைபர் செக்யூரிட்டி துறையில் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு இணையப் பாதுகாப்பை வழங்கும் 14 நிறுவனங்கள் தங்கள் சேவைகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும் உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஃபோர்டினெட் இணைய அச்சுறுத்தல்களைப் பகிர்ந்து கொள்ள சிங்கப்பூருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தகவல் மற்றும் மின்சார மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ இம்மாதிரியான புதிய முன்முயற்சிகள் சிங்கப்பூரில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புவதாகக் கூறினார்.