சிங்கப்பூர் அரசாங்கம் 10 மில்லியன் வெள்ளி நிதியை உலக அளவில் சிங்கப்பூரை விளம்பரப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு அளிப்பதற்காக வழங்கவிருக்கிறது.
இதனை நேற்று முன்தினம் ( ஏப்ரல் 5-ஆம் தேதி) சிங்கப்பூர் பயணத்துறை கழகமும், தகவல்,தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தெரிவித்தது.
சிங்கப்பூரைச் சார்ந்த படைப்புகளாக இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் பயணத்துறை கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Keith Tan இது குறித்து,“ சிங்கப்பூரை உலகமெங்கும் உள்ள பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் குறிப்பாக சிங்கப்பூருக்கு பயணம் செய்ய திட்டமிடாதவர்களையும் ஈர்க்க வேண்டும்´´ என்று CNA விடம் கூறினார்.
30 விழுக்காடு வரையிலான நிதி ஆதரவு வெற்றிகரமான படைப்புகளுக்கு வழங்கப்படும்.