சிங்கப்பூர் அரசாங்கம் அதிகமான மின்சார பேருந்துகளைக் கொண்டு வர திட்டம்!

சிங்கப்பூர் அரசாங்கம் மின் சக்தியால் இயங்கும் மின்சார பேருந்துகளை அதிகமாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது.

மின்சக்தியால் இயங்கும் பேருந்துகள் பழைய டீசல் பேருந்துகளுக்கு பதிலாக புழக்கத்துக்கு வருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் s. ஈஸ்வரன் அறிவித்தார்.

பொது போக்குவரத்துத் துறையை பசுமையாக்கும் திட்டத்தைப் பற்றியும் பேசினார். தற்போது சிங்கப்பூரில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிருமி பரவலுக்கு முன்பு இருந்த அளவில் சுமார் 90 விழுக்காட்டைத் தொட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2030-ஆம் ஆண்டில் இயங்கும் பேருந்துகளில் பாதி மின்சார பேருந்துகளாக இருக்கும் என்றும் கூறினார்.

2040-ஆம் ஆண்டில் சாலைகளில் ஓடும் அனைத்து பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக இருக்கும் என்றும் கூறினார்.தற்போது 60 மின்சாரப் பேருந்துகள் இருக்கின்றன.

மேலும் 400 மின்சார பேருந்துகளுக்கான ஏலக் குத்தகை குறித்து இம்மாத கடைசிக்குள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இவற்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் சாலைகளில் பார்க்கலாம் என்றும் கூறினார்.

மின்சார பேருந்துகளுக்காக புதிய பேருந்து நிலையங்களும் கட்டப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.