சிங்கப்பூர் : மண்டாய் Bird Paradise இல் முதியவர்களுக்கு இலவச டிக்கெட்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் வனவிலங்கு பூங்காவான Birds Paradise, மூத்த குடிமக்களுக்கு இலவச நுழைவுச் சலுகையை அறிவித்துள்ளது.

மாண்டாய் வனவிலங்கு காப்பகத்தில் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய ஆழமான புரிதலை பார்ப்பதன் மூலமும் கேட்கும் ஒலி மூலமும் பெற முடியும்.

மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.மேலும் வனவிலங்கு பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

மூத்தோருக்கான 49 வெள்ளி மதிப்புடைய டிக்கெட்டை வாங்குவதன் மூலம் கூடுதலாக ஒரு முதியவருக்கு இலவச நுழைவு கட்டணம் பெறலாம் என mandai.com இணையதளத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகைக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

👉சிங்கப்பூருக்கு இலவச நுழைவு அனுமதி பெற 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

👉நுழைவு அனுமதி அன்றே பயன்படுத்தப்பட வேண்டும்.

👉வேறொரு நாளுக்கு அனுமதி செல்லுபடி ஆகாது.

👉WildPass வைத்திருப்பவர்கள் அல்லது புதிய பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும்.

👉WildPass இன் கீழ் வழங்கப்படும் தள்ளுபடிகளை இந்த இலவச நுழைவு பாஸுக்கு பயன்படுத்த முடியாது.

👉 சிறுவருக்கான நுழைவு டிக்கெட்டுக்கு இது பொருந்தாது.Birds Paradise பூங்காவில் 400 இனங்களில் உள்ள 3,500 பறவைகளின் வெவ்வேறு வண்ணப் பறவைகளின் தொகுப்பு பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்த பறவைகளின் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

இந்தச் சலுகை ஆனது அக்டோபர் முதல் தேதியில் இருந்து தொடங்கி அக்டோபர் 27 வரை உள்ளது.