சிங்கப்பூர் Formula1 கார் பந்தயம் – 2024 அப்டேட்..!!

சிங்கப்பூர் Formula1 கார் பந்தயம் - 2024 அப்டேட்..!!

சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் Formula1 (F1) கிராண்ட் பிரிக்ஸ் இரவு நேரக் கார் பந்தயத்தின் இரண்டாவது பயிற்சி சுற்று (FP2) நேற்று (செப்-20) இரவு விமர்சையாக நடைபெற்றது.

இதில் Mc Laren காரை ஓட்டி வந்த லாண்டோ நோரிஸ் (Lando Norris) (1:30.727 sec) முதலிடம் பிடித்தார்.

இரண்டாவது இடத்தை Ferrari காரை ஓட்டிய சார்லஸ் லெக்லேறே (Charles Leclere) (+0.058) கைப்பற்றினார்.

மேலும் மூன்றாவதாக கார்லஸ் சைன்ஸ் (Carlos Sainz) (+0.624) வந்தடைந்தார்.இவரும் Ferrari காரை ஓட்டிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரவு நேரக் கார் பந்தயத்தின் மூன்றாவது பயிற்சி சுற்று இன்று ( செப்-21) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

மேலும் அதனை தொடர்ந்து 9.00 மணியளவில் தகுதிச் சுற்றும் இடம்பெறும்.

நாளை (செப்-22) மெரினா பேயில் இறுதி கார் பந்தயம் இரவு 8.00 மணியளவில் நடைபெறவும் உள்ளது.

கார் ஓட்டுநர்கள் சுமார் 62 முறை 4.94km வழித் தடத்தை சுற்றி வருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here ⬇️