கிழக்கு ஜெருசலத்தில் யூத ஆலயத்துக்கு அருகே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. அதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமுற்றனர்.
இச்சம்பவத்தைக் குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் இந்த தாக்குதலை சிங்கப்பூர் கடுமையாக கண்டிக்கிறது என்றும், இது அருவருக்கத்தக்க தாக்குதல் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலை 21 வயதுடைய பாலஸ்தீனத் துப்பாக்கிக்காரர் நடத்தியதாக இஸ்ரேலிய காவல்துறை கூறியது. தாக்குதல் நடத்தியவர் தனித்து செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல், காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியிருந்தது. இந்த தாக்குதலில் சிங்கப்பூர் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தகவல் இல்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டு இருந்தது.