சிங்கப்பூர் : வீட்டின் பெட்ரூமில் ஏற்பட்ட தீ!! வெளியேறிய கரும்புகை!!
தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 81 இல் உள்ள பிளாக் 889A இல் நேற்று (டிசம்பர் 09) காலை தீவிபத்து ஏற்பட்டது.
இது குறித்து காலை 6.40 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முகநூல் பக்கத்தில் கூறியது.
13 வது மாடியில் உள்ள ஓர் வீட்டில் கரும்புகை வெளியேறுவதை பார்த்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீச்சம்பவம் பற்றிய வீட்டில் இருந்த இருவர் குடிமை தற்காப்புப் படை வருவதற்கு முன்பே அவர்கள் வெளியேறி விட்டனர் என்றும் கூறியது.
படுக்கை அறையில் பரவி இருந்த தீ தண்ணீர் குழாய் கொண்டு அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீட்டில் இருந்த இருவரை அதிகாரிகள் பரிசோதித்தனர்.ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
Follow us on : click here