சிங்கப்பூர் : இயற்கை மீது அதீத அன்பு!! இளைஞர் செய்த செயலை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூர் : இயற்கை மீது அதீத அன்பு!! இளைஞர் செய்த செயலை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

உட்லண்ட்ஸில் குறைந்தது 5 கார்களின் டயர்களை பஞ்சர் செய்ததாக நம்பப்படும் 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அந்த இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

உட்லண்ட்ஸ் டிரைவ் 14 இல் உள்ள பல மாடி கார் பார்க்கிங்கில் தனது காரின் 4 டயர்களிலிருந்தும் காற்று வெளியேற்றப்பட்டு பஞ்சர் செய்யப்பட்டது குறித்து ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்த பகுதியில் மேலும் நான்கு கார்களுக்கு இதே போல் நடந்துள்ளது தெரிய வந்தது.மேலும் காரின் கண்ணாடியில் ஒரு துண்டு கடிதமும் வைக்கப்பட்டிருந்தது.

அந்த துண்டு குறிப்பில் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடுவதால் SUV வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று இருந்தது.

இச்சம்பவம் குறித்து உட்லண்ட்ஸ் பகுதி காவல்துறை விசாரணை மேற்கொண்டது. புகார் பெற்ற 8 மணி நேரத்தில் அந்த நபரை காவல்துறை கைது செய்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 மாதங்கள் சிறை தண்டனை, அதிகபட்சம் 2000 வெள்ளி அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.