சிங்கப்பூரில் இந்த ஆண்டுன் மூன்றாம் காலாண்டில் வேலை நிலவரம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.அதை அதற்கு முந்தைய காலாண்டில் பதிவான வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அது ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் ஒட்டு மொத்தமாக கூடிய வேலைகளின் எண்ணிக்கை 22,300.
11,300 ஆக இரண்டாம் காலாண்டில் பதிவானது.
வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் கட்டுமானம், உற்பத்தி துறைகளில் அதிகமாக வேலைக்கு சேர்ந்தனர்.
நிபுணர்கள்,மேலாளர்கள்,நிர்வாகிகள்,தொழில்நுட்ப வல்லுர்நர்கள் ஆகியவற்றில் பொறுப்பு வகிக்கும் உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 382000 அதிகரித்துள்ளது.இதே காலகட்டத்தில் வேலை அனுமதி வைத்திருப்போர்களின் எண்ணிக்கை 38,000 மட்டுமே உயர்ந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் வேலையின்மை விகிதம் 1.9 சதவீதத்திற்கு குறைந்தது.ஆட்குறைப்பு போக்கும் குறைந்துள்ளது.