சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!!

சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!!

சிங்கப்பூர் : பூன் கெங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த 66 வயதுடைய முதியவர் உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பூன் கெங் ரோட்டில் உள்ள பிளாக் 4 இல் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்தது குறித்து ஜனவரி 5 ஆம் தேதி தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

அந்த நபர் வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்ததாக காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியது.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.