சிங்கப்பூர் :உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தலாம்!!
சிங்கப்பூரில் உள்ள உயரமான குடியிருப்புகளில் இருந்து வீசப்படும் குப்பைகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரான்களையும் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.
இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையுமா என்பதை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாடியிலிருந்து குப்பைகள் வீசப்படுவதை கண்டுபிடித்து தடுக்கும் முயற்சிகளை ஆராயும் என்று நீடித்த நிலைத்தன்மை,சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கூறினார். மேலும் குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Follow us on : click here