உலகப் பெருந்தொற்று நிதிக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் தொற்று நோய்களுக்கான உலகளாவிய நிதிக்கு $10 மில்லியன் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனய்ரோ நகரில் G 20 மாநாடு நடைபெற்றது.
நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களின் கூட்டுக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஏற்கனவே சிங்கப்பூர் 2022 இல் $10 மில்லியன் நிதி அளித்தது.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள தொகையுடன் சேர்த்து மொத்தம் 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் திரட்டப்படும் நிதியானது தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும், அதற்குத் தயார்படுத்துவதற்கும், சமாளிப்பதற்கும் உதவ இந்த நிதி பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0