Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் கொளுத்தப்பட்ட ஆடவர் மரணம்; முதியவர்மீது கொலை வழக்கு

மார்­சி­லிங் கிரசென்ட் புளோக் 210ல் உள்ள ஒரு மினி­மார்ட் முன்­னால் 2022 டிசம்­பர் 28ஆம் தேதி சம்­ப­வம் நிகழ்ந்­தது.

டான் கிம் ஹீ, 37, என்­ப­வர் மீது டே கெங் ஹாக், 65, என்­ப­வர் தீப்­பற்­றும் திர­வம் ஒன்றை ஊற்றி, ‘லைட்­டர்’ மூலம் தீமூட்­டி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது.

இரவு 10.10 மணி­ய­ள­வில் அழைப்பு வந்­த­தைத் தொடர்ந்து சம்­பவ இடத்­திற்­குக் காவல்­து­றை­யி­னர் விரைந்து சென்­ற­போது அங்கு திரு டான் தீக்­கா­யங்­க­ளு­டன் காணப்­பட்­டார்.

உட­ன­டி­யாக அவர் கூ தெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டார்.

அப்­போது அவர் சுய­நி­னை­வோடு இருந்­த­தா­க­வும் சம்­பவ இடத்­தில் இருந்த டே கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

சிகிச்சை பெற்று வந்த திரு டான் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, டே மீதான கொலை­மு­யற்சி வழக்கு கொலை வழக்­காக மாற்­றப்­பட்டு உள்­ளது.

சாங்கி சிறைச்­சாலை மருத்­துவ நிலை­யத்­தில் விசா­ர­ணைக் கைதி­யாக அவர் வைக்­கப்­ப­டு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு மீண்­டும் இம்­மா­தம் 27ஆம் தேதி விசா­ர­ணைக்கு வரும். கொலை வழக்கு நிரூ­பிக்­கப்­பட்­டால் மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

திரு டான் எப்­போது மர­ண­மடைந்­தார் என்ற விவ­ரம் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­வில்லை.

அவர் சம்­ப­வம் நிகழ்ந்த இடத்­தில் இருந்த ‘மினி­மார்ட்’டின் உரி­மை­யா­ளர் என்­ப­தும் குற்­றம் சாட்­டப்­பட்ட டே, அழகு நிலை­யம் ஒன்­றின் உரி­மை­யா­ளர் என்­ப­தும் அர­சாங்­கத்­தின் நிறு­வ­னப் பதி­வ­கம் மூலம் தெரி­ய­வந்­தது.