சிங்கப்பூர் : விதிமுறைகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!
சிங்கப்பூரில் உள்ள ஆர்ச்சர்ட் ரோட்டில் சைக்கிளோட்டுவதற்கான விதிமுறைகளை மீறிய குற்றத்தை 6 இளைஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அவர்கள் சைக்கிள்களை ஓட்டும் போது சாகச செயல்களில் ஈடுபட்டனர்.மேலும் வாகனங்களுக்கு இடையே ஓட்டி சென்றதாகவும் கூறப்பட்டது.
விதிகளை மீறி செயல்பட்ட அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவர்கள் நன்னடத்தை உத்தரவுக்கு தகுதி பெறுவார்களா என்பதை சரிபார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி இரவு 11 மணிக்கு காவல்துறைக்கு புகார் கிடைத்ததாக தெரிவித்தது.அன்றைய தினம் இரவு புக்கிட் பாஞ்சோங் ரயில் நிலையத்திற்கு அருகே 6 இளைஞர்கள் உட்பட 9 பேரை காவல்துறை சந்தித்தது.
மீதமுள்ள மூவர்களின் அடையாளம் தெரியவில்லை.அவர்கள் புக்கிட் தீமா ரோட,ஸ்டீவன்ஸ் ரோடு,ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் லாவ் பா சாட் ஆகிய பகுதிகளின் வழியாக சைக்கிள்களை ஓட்டி சென்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL