உற்பத்தி துறையில் தொடர்ந்து வளர்ச்சியை காணும் சிங்கப்பூர்!!

உற்பத்தி துறையில் தொடர்ந்து வளர்ச்சியை காணும் சிங்கப்பூர்...!!!!

சிங்கப்பூரின் உற்பத்தியானது ஜூன் 2021க்குப் பிறகு விரைவான வளர்ச்சியை கண்டுள்ளது.

இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 21 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில், குறிப்பாக செமிகண்டக்டர்கள் மற்றும் தகவல் தொடர்புகள் & நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாகும்.

உற்பத்தித் துறை கடந்த மாதம் 6.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஏறக்குறைய அனைத்து துறைகளும் விரிவடைந்துள்ளன.

பயோமெடிக்கல் துறை மட்டும் சுமார் 16 சதவீதம் சரிந்தது.

மின்னணுவியல் துறை ஆண்டுக்கு 49 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

சிறப்பு இராசாயனங்களின் உற்பத்தி அதிகரிப்பால்,இரசாயன ஏற்றுமதி துறையும் வளர்ந்துள்ளது.

விமான பாகங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக விண்வெளித் துறை வளர்ந்தது.

பால் பவுடர் மற்றும் பானங்களின் உற்பத்தி அதிகரித்ததால் பொது உற்பத்தியும் வளர்ந்தது.

சிங்கப்பூர் உற்பத்தி PMI ஆகஸ்ட் 2024 இல்,50.9 ஆக இருந்தது.

எலக்ட்ரானிக்ஸ் PMI, தொழிற்சாலை நடவடிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

இதன் வளர்ச்சியானது ஆகஸ்ட் மாதத்தில் 51.3 ஆக இருந்தது.

2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஆண்டுக்கு 3.2% வளர்ச்சியை கண்டுள்ளது.

சிங்கப்பூரின் உற்பத்தி 2030 மூலோபாய கொள்கையானது 2030க்குள் உற்பத்தி மதிப்பை 50% அதிகரித்து, மேம்பட்ட உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.