265 பேரை பணிநீக்கம் செய்ய உள்ள சிங்கப்பூர் நிறுவனம்!!

யூனிட்டி சாப்ட்வேர், வீடியோ கேம் மென்பொருள் நிறுவனம் ஓர் அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளது.ஆள்குறைப்பு மற்றும் அலுவலகங்கள் மூடல் குறித்து தகவலை வெளியிட்டுள்ளது.இது பிரபல Pokemon Go Game – யை உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

அது சுமார் 265 பணியாளர்களை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதோடு, அதன் அலுவலகங்களையும் மூட உள்ளதாகவும்,14 இடங்களில் உள்ள அலுவலகங்கள் மூடப்படும் என்று கூறியுள்ளது.

இதில் சிங்கப்பூர் மற்றும் பெர்லின் அடங்கும்.

நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களின் ஆட்குறைப்பு விகிதம் 3.8% என்று சொல்லப்படுகிறது.

வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் வழக்கத்தையும் நீக்க உள்ளதாகவும் கூறியது.

நிறுவனத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், வணிக நடவடிக்கைகளை மறுவடிவமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யூனிட்டின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.