சிங்கப்பூர் நிறுவனங்கள் வேலைக்கு ஊழியர்களை எடுக்கும்பொழுது அவர்களுடைய கல்வித் தகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் அவர்களுடைய திறமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல் அவர்களின் மேம்பாட்டிலும் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதையும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தினார்.
ஊழியர்களின் பயிற்சிக்கான செலவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ஊழியர்களுக்காக இன்னும் சிறப்பான திட்டங்களை வகுக்க வேண்டும். அதில்,வேலைச் சார்ந்தவைகளை தேர்வு செய்யும் முறையில் இருக்க வேண்டும் என்றார்.
ஊழியர்கள் தங்களுடைய திறன்களை மேலும் வளர்த்துக் கொள்வதால், அவர்கள் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார்.
வெற்றியின் வரையறையை விரிவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
வெவ்வேறு பங்களிப்பையும், திறமைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் , சராசரி நிலையில் வருமானம் ஈட்டுவோருக்கும் உள்ள இடைவெளியை குறைக்க இயலும்.
இவ்வாறு இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூரர்களின் ஆதரவு தேவை என்று குறிப்பிட்டார்.
அதன் ஓர் பகுதியாக பொருள், சேவைகளுக்கான கட்டணத்தை மக்கள் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டி வரலாம் என்று கூறினார்.
இது சமூகத்தில் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள் வளர்ச்சி காண வகையில் உதவும் என சிங்கப்பூர் துணைப் பிரதமர் கூறினார்.