சிங்கப்பூர் : Cheese Club Singapore Pts Ltd நிறுவனம் அதன் Fruitiere des jarrons’ Mont d’Or உணவு பொருளைச் சந்தையில் இருந்து திரும்ப பெறுகிறது.
அதில் Pathogen Yersinia enterocolitica எனும் கிருமி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பிரான்சில் அந்த உணவை சப்ளை செய்யும் நிறுவனமும் சந்தையிலிருந்து திரும்ப பெறுகிறது.
அந்த உணவை வாங்கியுள்ளவர்கள் உண்ண வேண்டாம் என்றும் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த உணவு பொருளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு Cheese Club Singapore Pte Ltd நிறுவனத்துக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
Yersinia enterocolitica என்பது உணவில் பரவக்கூடிய நோய் கிருமி.இது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் இரப்பை குடல் அழற்சி ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதன் அறிகுறிகள் காய்ச்சல்,அடி வயிற்றில் வலி, ரத்தப் போக்குடன் பேதி.
அந்த உணவை சாப்பிட்டவர்கள் தங்கள் உடல்நிலை குறித்து கவலை இருந்தால் மருத்துவரை நாடலாம் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.