சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!!
செங்காங் ஈஸ்ட் அவென்யூ மற்றும் செங்காங் ஈஸ்ட் ரோடு இடையேயான சாலை சந்திப்பில் கார் விபத்து நடந்தது.
தெரு விளக்கின் கம்பத்தில் வெள்ளை நிறக் கார் மோதிக்கொண்டது.
இதனால் தெரு விளக்கு சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 30-ஆம் தேதி சுமார் 11.25 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இந்த சம்பவம் குறித்து புகார் வந்திருந்ததாகவும், ஆனால் எந்த உதவியும் தேவைப்படவில்லை என்றும் கூறியது.
Follow us on : click here