சிங்கப்பூர் : மரத்தின் மீது மோதிய பேருந்து!!நொறுங்கிய கண்ணாடிகள்!! ஓட்டுநர் பலி!!

சிங்கப்பூர் : மரத்தின் மீது மோதிய பேருந்து!!நொறுங்கிய கண்ணாடிகள்!! ஓட்டுநர் பலி!!

நவம்பர் 21-ஆம் தேதி இரவு காக்கி புக்கிட் அவென்யூ 2 இல் உள்ள சந்திப்பில் SBS Transit பேருந்து மரத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேர்ந்தது.

சிங்கப்பூர் காவல்துறைக்கும் ,சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு இந்த விபத்து குறித்து நேற்றிரவு 11 மணிக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தன.

இந்த விபத்தில் 58 வயதுடைய SBS Transit பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயம் பட்ட ஐவரும் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பேருந்து ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது சுயநினைவின்றி இருந்தார் என்பதை காவல்துறை தெரிவித்தது.

Singapore roads accident.com அதன் முகநூல் பக்கத்தில் இச்சம்பவம் குறித்த தகவலை காணலாம்.

பேருந்து ஓட்டுநர் மறைவுக்கு SBS Transit நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இரங்கலை தெரிவித்தார்.மேலும் காயமடைந்த 5 பயணிகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.