நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் வரவேற்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
தற்போது அனைத்துலக பொருளியலில் அதிகரித்து வருவதால் இதுபோன்ற நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
இந்த புதிய திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
மூத்தோர், உடற்குறையுள்ளோர் ஆகியோர் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். இவர்களுக்காக உதவும் வகையில் புதிய திட்டங்கள் அமைந்திருப்பதை வரவேற்பதாகக் கூறினர்.
இந்த முயற்சிகளை வீணாக்காமல் இருக்க இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிக படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.