சிங்கப்பூர் பட்ஜெட் 2024- வெளிநாட்டு ஊழியர்களுக்கான தகவல்!!

சிங்கப்பூர் பட்ஜெட் 2024- வெளிநாட்டு ஊழியர்களுக்கான தகவல்!!

CDC Voucher :

சுமார் 1.4 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு சமூக மேம்பாட்டு கவுன்சில் (CDC) வவுச்சர்கள் கூடுதலாக $600 வெள்ளி வழங்க உள்ளது.

2024 ஜூன் மாதம் இறுதியில் முதல் $300 வெள்ளி வழங்கப்படும்.

மீதமுள்ள $300 வெள்ளி அடுத்த வருடம் ஜனவரியில் பெறுவார்கள்.

சிறப்பு பணம் :

$200 முதல் $400 வெள்ளி வரையிலான வாழ்க்கைச் செலவின் சிறப்புதொகையை 2024- செப்டம்பரில் தகுதியான சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்.

சிறப்பு பணத்தைப் பெறும் தகுதியுடைய சிங்கப்பூரர் 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவராக இருக்க வேண்டும்.

அவர் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கக் கூடாது.

ஆண்டு வருமானம் $100,000 வெள்ளிக்குள் இருக்க வேண்டும்.

Skills Future Credit:

சிங்கப்பூரில் வசிக்கும் 40 வயது அல்லது அதற்குமேல் வயதுள்ள அனைத்து சிங்கப்பூரர்கள் $4000 Skills Future Credit பெறுவர்.

அதிகரித்து வரும் செலவினத்தை சமாளிப்பதற்காக சுமார் $1.3 பில்லியன் டாலரை நிறுவனங்களுக்கு உதவ ஒதுக்கவிருக்கிறது.

மேலும்,30 ஜூன் 2025 வரை Skills Future Credit நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

$4000 கிரெடிட்டுக்கு காலாவதி தேதி கிடையாது.

இளைய சிங்கப்பூரர்கள் 40 வயதை எட்டியவுடன் இந்த டாப்-அப்பை பெறுவார்கள்.

அந்த நிதி இவ்வருடம் மே மாதம் வழங்கப்படும்.

இதனை அவர்கள் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

U-Save தள்ளுபடி :

வீட்டு வசதி மேம்பாட்டு கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும்.

தகுதியான குடும்பங்கள் மொத்தம் $950 வெள்ளி வரை பெறுவார்கள்.

இந்த உதவி மூன்று மற்றும் நான்கு அறை கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு நான்கு மாத வாடகையை உள்ளடக்கும்.

மத்திய சேமநிதி சிறப்பு கணக்கு :

அடுத்த ஆண்டு 55 அல்லது அதற்குமேல் வயதுள்ளவர்களின் மத்திய சேமநிதி சிறப்பு கணக்கு மூடப்படும்.

அவர்கள் விருப்பப்பட்டால் தங்களின் ஓய்வூதியக் கணக்கில் அதிகப் பணத்தைப் போடலாம்.

இனி அந்த கணக்கில் அதிகபட்சமாக $426,000 வெள்ளி வரை சேர்க்கலாம்.

இளம் முதியவர்களுக்கு ஆதரவு :

Manjulah தொகுப்பு திட்டத்தின்கீழ் இளம் முதியவர்களுக்கு ஆதரவு வழங்கப்படவுள்ளது.

$6000 வெள்ளி வரை மாத வருமானம் ஈட்டும் 1973 அல்லது அதற்குமுன் பிறந்த சிங்கப்பூரர்கள் வேலை செய்யும் வரை வருடத்திற்கு ஒருமுறை $1000 வெள்ளி பெறுவார்கள்.

1973 அல்லது அதற்குமுன் பிறந்த தகுதிபெரும் சில சிங்கப்பூரர்களுக்கு $750 – $1500 வரை மெடிசேவ் போனஸ் பெறுவார்கள். இது ஒருமுறை வழங்கப்படும்.

ITE மாணவர்களுக்கு நிதி உதவி :

ITE மாணவர்கள் படிப்பைத் தொடர அரசாங்க சார்பில் நிதி உதவி வழங்கவிருக்கிறது.

எதிர்கால எரிசக்தி நிதி :

சுமார் $5 பில்லியன் டாலர் எதிர்கால எரிசக்தி நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய இணைய பாதுகாப்பு தளம் :

பொங்கோல் வட்டாரத்தில் இந்த புதிய மையம் அமைக்கப்படும்.

படிப்படியாக உயரும் ஊதியமுறையின் கீழ் :

படிப்படியாக உயரும் ஊதிய முறையின்கீழ் குறைந்தபட்ச சம்பளம் $2500 முதல் $3000 வெள்ளி ஆக அதிகரிக்கும்.

இளம் குடும்பங்களுக்கு ஆதரவு :

பொதுச் சந்தையில் வீடுகளை வீட்டு வசதிக்காக காத்திருக்கும் இளம் குடும்பங்கள் வாடகைக்கு எடுத்து வசிப்பவர்களாக இருந்தால் ஓராண்டுக்கான வவுச்சர்களை அரசு வழங்கும்.

வெளிநாட்டு ஊழியர்களை எடுக்கும் நிறுவனங்கள் :

வெளிநாட்டு ஊழியர்களை பணி அமர்த்தும் நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச ஊதியம் $1400 லிருந்து $1600 ஆக உயரும்.

இன்டர்நெட் வேகம் :

10 மடங்காக இன்டர்நெட் விரிவாக்க கட்டமைப்பின் வேகம் அதிகரிக்கும்.

Age well SG :

Age well SG முதியோர்களுக்கான திட்டத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு $3.5 பில்லியன் நிதி ஒதுக்கப்படும்.

வரி விலக்கு :

வெளிநாடுகளுக்கு மனிதாபிமான எண்ணத்தில் பணத்தை வழங்கும் நன்கொடையாளர்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.

Life SG சிறப்பு தொகை :

அனைத்து முன்னாள் தேசிய சேவையாளர்களுக்கும், இந்நாள் தேசிய சேவையாளர்களுக்கும் $200 வெள்ளி வழங்கப்படும்.

மெடிசேவ் போனஸ் :

21 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 1.4 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $300 வெள்ளி வரை ஒருமுறை கிடைக்கும்.

$200 வெள்ளி 1984க்கும் 2003 க்கும் இடைப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

புதிய திட்டம் :

புதிய தற்காலிக ஆதரவு திட்டம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த திட்டம் அவர்கள் இன்டர்ன்ஷிப் அல்லது வேறு வேலைகளைத் தேடும்போது பயனுள்ளதாக இருக்கும்.