Singapore News in Tamil

புதிய முதலீட்டு ஒப்பந்தத்திற்கு சிங்கப்பூர் – பிரிட்டன் கலந்துரையாடல்!

புதிய இருத்தரப்பு முதலீடு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கு சிங்கப்பூரும், பிரிட்டனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம் முதலீட்டுக்கான வலுவான அடித்தளத்தை இரு நாடுகளுக்கும் இடையே அமைத்துத் தரும்.

இந்த புதிய ஒப்பந்தத்தில் முதலீட்டாளர்களையும், முதலீடுகளையும் எவ்வாறு கையால்வது என்பதைப் பற்றிய விரிவான விதிமுறைகள் இருக்கும்.

சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சகம் இது குறித்து தெரிவித்தது. 1975 -ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு பதிலாக அதனை எட்டுவது திட்டம் என்று அமைச்சகம் கூறியது.