சிங்கப்பூர் : சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்ட Big Sister's தீவு!!
அக்டோபர் 28-ஆம் தேதி Big Sister’s தீவு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொது மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அங்கு மிதக்கும் பலகைப் பாதை,கடலோரக் காட்டுப்பாதை,உப்புநீர் ஏரி என பல புதிய அம்சங்கள் பொதுமக்களைக் கவரும் வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளன
வருகையாளர்கள் ஏரியில் நீந்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முதல் கடற்பூங்கா Big Sister’s தீவில் இருக்கிறது.
கடற்பூங்காவின் முக்கியப் பங்கு :
கடல்சார்ந்த வளங்களைப் பாதுகாப்பதிலும், ஆராய்வதிலும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.
40 ஹெக்டேர் பரப்பளவில் கடற்பூங்கா அமைந்துள்ளது.
இன்று முதல் மரினா சௌத்திலிருந்து படகில் Big Sister’s தீவுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0