சிங்கப்பூர் : பேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! சரிந்த நிலையில் இருந்த நபரை மீண்டும் மீண்டும் முகத்தல் குத்திய நபர்!!
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி பேருந்தில் 30 வயது மற்றும் போதையில் இருந்த டாங், மற்றொரு பயணியுடன் பேசும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர் பேருந்து ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்த சொன்னார். வண்டி நின்ற போது மற்ற பயணி பேருந்தில் இருந்து இறங்கினர்.
அவர் இறங்கியதும் டாங் கதவுக்கு அருகில் நின்று கொண்டு மேலும் அவரை கத்தினார். குடிபோதையில் இருந்த டானும் பஸ்டாப்பில் நின்றுள்ளார்.
டாங் அந்த பயணியை தாக்குவதற்காக பேருந்தில் இருந்து இறங்கினார். ஆனால் டான் அவரை தடுத்ததில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த பதிவு பேருந்தில் உள்ள க்ளோஸ்டு சர்க்யூட்டில் பதிவாகியுள்ளது. திரு டாங் பேருந்தில் உள்ள இருக்கையில் இருப்பதைக் காட்டியது, அதே இடத்தில் டான் முன் கதவுக்கு அருகில் இருந்து கத்துவதையும் பார்த்தனர்.
கொஞ்ச நேரம் கழித்து டாங், டானைப் பார்த்து கத்தினார். அவர் டாங்கின் முகத்தில் குத்த தொடங்கினார்.மேலும் அவரை சீட்டில் தள்ளினார்,மேலும் அவர் சரிந்த நிலையில் இருந்தபோதிலும் முகத்தில் குத்தினார்.
போலீசார் வருவதற்குள் டான் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தால் டாங்கிற்கு காயங்கள் ஏற்பட்டது. அவரின் மூக்கு உடைந்தது.
டானிற்கு 8 முதல் 9 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
டான் தானாக முன்வந்து குற்றங்களை ஒப்பு கொண்டார்.அவரின் குற்றத்திற்கு 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தானாக முன்வந்து காயங்களை ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் அல்லது பிரம்படி வழங்கப்படலாம்.