சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!!

ஆசியான் வெற்றியாளர் கோப்பை காற்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.டிசம்பர் 20 ஆம் தேதி (நாளை) சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தை நேரடியாக காண விரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இலவசப் பேருந்து சேவையை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நாளை இப்போட்டி நடைபெறும்.

நாளை நடைபெறும் இப்போட்டியில் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றாலோ அல்லது சமநிலை ஆனாலோ அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.

இப்போட்டியை நேரடியாக காண இலவசப் பேருந்து சேவையைப் பயன்படுத்தும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும்.

ஜாலான் புசார் அரங்கத்திலிருந்து நாளை காலை 11 மணிக்கு பேருந்து மலேசியாவுக்கு புறப்படும்.

நாளை இரவு 9 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

சிங்கப்பூருக்கு மீண்டும் இரவு 11.30 மணிக்கு புறப்படும்.

இந்த இலவச பேருந்து சேவையை பயன்படுத்த விரும்புவர்கள் இன்று மதியம் 3 மணிக்குள் சிங்கப்பூர் காற்பந்து சங்கத்திடம் அவர்களுடைய விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Follow us on : click here ⬇️