சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது?

சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது?

பார்ட்லி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த உலோகத் தூண்களின் பாகங்கள் மார்ச் 11 ஆம் தேதி இடிந்து கீழே விழுந்ததில் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

24 புதிய தொழிலியல் சாலையில் உள்ள ‘இன்ஸ்பேஸ்’ வர்த்தக நிலையத்திற்கு அருகில் சாலை முழுவதும் உலோகத் தூண்களின் பாகங்கள் சிதறிக் கிடப்பதை அதில் காணலாம்.

கிட்டத்தட்ட 2 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீளம் கொண்ட உலோகப் பொருட்கள் இடிபாடுகளில் இருந்தன.

இந்த உலோகப் பொருட்கள் கட்டட முகப்பின் மேல் தளங்களின் ஒரு பகுதியில் இருந்து உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிற்பகல் 3.50 மணியளவில் சென்றனர். அப்போது சிதறி கிடந்த உலோகப் பொருட்கள் முன்னதாகவே அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

அவை சாலைக்கு அருகில் இருக்கும் புல்வெளிக்கும் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருக்கும் வாகனம் நிறுத்துமிடங்களுக்கும் மாற்றப்பட்டிருந்தன.

கட்டட,கட்டுமான ஆணையமும்,காவல்துறையும் இச்சம்பவம் குறித்து சுமார் 6 மணியளவில் இன்ஸ்டகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டன.

இந்த சம்பவம் நடந்த இடத்தையும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளையும் தங்களின் கண்காணிப்பு வட்டாரத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தன.