விமானத்திற்குள் வழங்கப்படும் சேவையை மீண்டும் தொடங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்….

விமானத்திற்குள் வழங்கப்படும் சேவையை மீண்டும் தொடங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்....

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 1 முதல் விமானத்திற்குள் வழங்கப்படும் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் SQ321 விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதை தொடர்ந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

குறிப்பாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சீட் பெல்ட்களுக்கான சிக்னல் முடக்கி விடப்பட்டு விமான நிறுவனம் உணவு வழங்குவதை நிறுத்தியது.அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது நிலைமை சீரானதால் நிறுவனம் பழைய நடைமுறைக்கு திரும்பியுள்ளது.
எனினும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானத்திற்குள் வழங்கப்படும் சேவையைத் தொடரலாமா வேண்டாமா என்பது வானிலை நிலவரம் மற்றும் விமானச் செயல்பாடுகளைப் பொறுத்தது என்று கூறியுள்ளது.

குறிப்பாக எச்சரிக்கை சிக்னல் இயக்கப்பட்டவுடன் சூப் உள்ளிட்ட சூடான உணவுகள் வழங்கப்படாது. தரை நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் மறு ஆய்வு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்திற்குள் அமர்ந்திருக்கும் போது சீட் பெல்ட்களை
போட்டிருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க, விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்பு திரைகள் மூலம் பயணிகளுக்கு நினைவூட்டும் வகையில் நிறுவனம் வழிவகை செய்துள்ளது.

இது குறித்து கடந்த 4 வாரங்களாக விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.