சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஆட்டம் கண்ட சம்பவம்!! காயமடைந்த பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஆட்டம் கண்ட சம்பவம்!! காயமடைந்த பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

கடந்த மாதம் 20-ஆம் தேதி நடுவானில் SQ321 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடுமையாக ஆட்டம் கண்டது.

இதனால் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.ஒருவர் உயிரிழந்தார்.
சுமார் 211 பயணிகளுக்கு பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்(SIA) அறிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

இ-மெயில் வாயிலாக இழப்பீடு குறித்து தகவல் ஜூன் 11 வழங்கப்படும் என்று கூறியது.

லேசான காயங்களுக்கு 10,000 அமெரிக்கா டாலர் வழங்கப்படும்.

கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்கள் உடல்நலம் சரியானதும் நிறுவன அதிகாரிகளை நேரில் சந்திக்கலாம்.அவர்களுக்கான இழப்பீட்டு தொகையைப் பேசி முடிவெடுக்கலாம் என்று கூறியது.

கடுமையான காயங்கள் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தபட்ட மற்றும் நீண்டகால மருத்துவ கவனிப்பும் நிதி உதவி தேவைப்படும் பயணிகளுக்கு முன்பணமாக 25,000 அமெரிக்கா டாலர் வழங்கப்படும்.

இந்த இழப்பீடு தொகை அவர்களுக்கான உடனடித் தேவைகளைப் பூர் த்தி செய்ய உதவும் என்று தெரிவித்தது.

இது அவர்களுக்கு வழங்கும் மொத்த இழப்பீட்டு தொகையின் ஒரு பகுதியாக அது இருக்கும் என்று கூறப்பட்டது.

அனைத்து பயணிகளும் தங்கள் விமான டிக்கெட்டின் முழுப் பணத்தையும் திரும்ப பெறுவார்கள்.