சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையச் சேவை பாதித்தாலும் விமானச் சேவை தொடர்ந்தது!!
சிங்கப்பூர்: உலகளாவிய இணைய சேவை செயலிழப்பால் முன்பதிவு செய்யும் தொடர்பு எண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ION சேவை நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இணைய சேவை செயலிழப்பு காரணமாக விமான சேவைகள் வழக்கம் போல் நடைபெறுமா என பயணிகள் குழப்ப நிலையில் இருந்ததாக கூறப்பட்டது.
பின்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் எந்த இடையூறும் இல்லை என்றும் திட்டமிட்டபடி விமானச் சேவைகள் தொடரும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது.
புதிய விமான டிக்கெட்டை வாங்குவதற்கும் அல்லது ஏற்கனவே உள்ள விமான டிக்கெட்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இணையதளம் அல்லது செயலியைப் பயன்படுத்துமாறு பயனர்களைக் கேட்டுக் கொண்டது.
மேலும் இணைய சேவை செயலிழப்பால் அவசரமற்ற கோரிக்கைகளுக்கு நிறுவனத்துடன் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
Follow us on : click here