சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

ஜாலான் காயுவுக்கும் செங்காங் வெஸ்ட் வே சாலைக்கும் இடையே பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.35 மணியளவில் விபத்து ஏற்பட்டது.இந்த சாலை விபத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி மற்றும் அதில் பயணம் செய்த பெண்ணும் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமை த் தற்காப்பு படை மற்றும் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து 8 World செய்தி தகவல் கேட்டது.

இந்த இரண்டு விபத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள்ளன.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கூறியது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

காரின் 72 வயது ஓட்டுநர் விசாரணைக்கு உதவுவதாக கூறப்படுகிறது.