சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!!

சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!!

சிங்கப்பூரில் கவனக்குறைவாக வாகனமோட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக முப்பது வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் மாதம் 15ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணி அளவில் பார்ட்லி ரோட் ஈஸ்ட் ஏர்போர்ட் ரோட் சாலைகளின் சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் வெள்ளை கார் ஒன்றின் முன்னால் மோட்டார் சைக்கிள் விழுந்து கிடப்பதை அந்தப் படத்தில் காணலாம்.

விபத்தில் காயமடைந்தவருக்கு அந்த வழியே சென்றவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உதவி செய்தது புகைப்படங்களில் பதிவாகி இருந்தது.

காயமுற்ற 70 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan