சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!!

சிங்கப்பூர் : பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த நபர்!! சுட்டு பிடித்த காவல்துறை!!

பாசிர் ரிஸ் பூங்காவில் இன்று காலை ஆயுதம் வைத்திருந்த நபரை காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டார்.அந்த நபர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முயன்றார்.அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரை சுட்டனர்.இந்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்தது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாசிர் ரிஸ் பூங்காவில் உள்ள ஒரு கட்டடத்தின் மேல் ஒரு பெண் அமர்ந்திருப்பதாக காலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

ஆனால் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு யாரும் இல்லை.ஆனால் அங்கு நபர் ஒருவர் இருப்பதை அதிகாரிகள் பார்த்தனர்.

அதிகாரிகள் அவரை நோக்கி சென்றனர்.அந்த நபர் அவரிடம் இருந்த கருவியை அதிகாரிகள் நோக்கி காண்பித்தார்.

அந்த நபர் கருவியிலிருந்து தீ வந்தது.

கையில் இருக்கும் கருவியை கீழே போடும்படி அதிகாரிகள் அவரை எச்சரித்தனர்.

அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் அந்த நபர் இணங்கவில்லை.கருவியைக் கீழே போடாமல் தொடர்ந்து அதிகாரிகளை நோக்கி சென்றார்.

அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் 30 வயதுடைய அதிகாரி அந்த நபரைச் சுட்டுள்ளார்.

அதன் பின் அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவருக்கு அருகே கத்தி இருந்தது தெரிய வந்தது.

காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 42 வயதுடைய நபர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.